2014 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் 'கோலி சோடா' படத்தை விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவையும் கையாண்டார். ரஃப்நோட் புரொடக்ஷனின் கீழ் அவரது சகோதரர் பரத் சீனி தயாரித்த இப்படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பக்கோடா பாண்டி மற்றும் பசங்க புகழ் முருகேஷ் ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் என். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸால் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தை தொடர்ந்து கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, க்ரிஷா குருப், ரக்ஷிதா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா மற்றும் ஸ்டன் சிவா ஆகியோர் நடித்தனர்.
இந்நிலையில் இந்த கோலி சோடா படத்தின் மூன்றாவது பாகம் "கோலிசோடா 2.5" என்ற பெயரில் உருவாகி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் விஜய் மில்டன் ஆட்டோகிராப், காதல், போஸ், சாமுராய், வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள, கோலி சோடா-2 படங்களை தொடர்ந்து ,நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் விஜய் மில்டன் 'பைராகி' படத்தை இயக்கினார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் "மழை பிடிக்காத மனிதன்" படத்தை இயக்கி வருகிறார்.
0 Comments