ரன்பீர் & ஆலியா பட் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.!

 நடிகர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதிக்கு குழந்தை பிறந்ததற்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

சமீபத்தில் தான், நடிகை ஆலியா பட்டிற்கு மும்பையில் உள்ள அவரது வீட்டில் எளிய முறையில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நடிகை ஆலியோ பட் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்ததை அடுத்து அவை வைரல் ஆகியிருந்தன.

இந்நிலையில்தான்,  ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. மும்பை ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில், ஆலியா பட் இன்று அனுமதிக்கப்பட்டு , அவருக்கு பெண் குழந்தை  பிறந்துள்ளதை அவர் தமது சமூக வலைதளத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, இணையத்தில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();