கங்கை அமரனின் மகன் பிரேம்ஜியின் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருத்தணி திருக்கோயிலில் நடைபெற்றது. பிரேம்ஜியின் அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபு முன்னிலையில் அந்த திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணத்திற்கு இளையராஜா குடும்பத்தில் இருந்து யாரும் வராதது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளையராஜாவிடம் மணமக்கள் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.பிரேம்ஜி தனது வீட்டிலேயே கடந்த ஒரு வருடமாக இந்து என்பவருடன் லிவிங் டுகெதரில் வசித்து வந்ததாகவும் தற்போது முறைப்படி திருமணம் செய்து வாழலாம் என நினைத்து இருவரும் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
0 Comments